மேஷம் மேஷ ராசி அன்பர்களே, எதிர்பார்ப்புகள் நாளடைவில் நிறைவேறும். குடியிருக்கும் வீட்டை சீரமைக்க வேண்டிவரும். கோபத்தை குறைப்பது நல்லது. உத்தியோகத்தில் அமைதி நிலவும்.
ரிஷபம் ரிஷப ராசி நேயர்களே, நினைத்த காரியம் நிறைவேறும். விமர்சனத்தை பொருட்படுத்த வேண்டாம். பிரியமானவர்களுக்காக சிலவற்றை விட்டுக்கொடுக்கவும். உத்தியோகத்தில் பொறுப்புகள் கூடும்.
மிதுனம் மிதுன ராசி நேயர்களே, இழுபறியாக இருந்த வேலைகள் சாதகமாக நடந்து முடியும். தேவையற்ற செலவுகளை குறைக்கவும். உடல் நலம் மேன்மை தரும். உத்யோகத்தில் சில சலுகைகள் கிடைக்கும்.
கடகம் கடக ராசி நேயர்களே, குடும்பத்தில் இருந்த சிறுசிறு பிரச்னைகள் சரியாகும். சாதூர்யமான பேச்சு காரிய வெற்றிக்கு உதவும். சோர்வு நீங்கி உற்சாகம் ஏற்படும். தொழில், வியாபாரம் வளர்ச்சி பெரும்.
சிம்மம் சிம்ம ராசி அன்பர்களே, குடும்ப பொறுப்புகளில் கூடுதல் கவனம் தேவை. தெய்வ பக்தி அதிகரிக்கும். வீண் செலவுகளை தவிர்க்கவும். உத்யோகத்தில் வேலை பளு குறையும்.
கன்னி கன்னி ராசி நேயர்களே, குடும்பத்திற்காக இரவு பகல் பாராமல் உழைக்க வேண்டிவரும். புதிய முயற்சிகளை தள்ளி போடவும். கடன் வாங்குவதை தவிர்க்கவும். உத்யோகத்தில் அமைதி நிலவும்.
துலாம் துலாம் ராசி அன்பர்களே, குடும்பத்தில் சுக சௌக்கியம் உண்டாகும். எதிர்பார்த்த தகவல் வரும். சாட்சி கையெழுத்து போட வேண்டாம். உத்யோகத்தில் ஊதிய உயர்வு கிடைக்கும்.
விருச்சிகம் விருச்சிக ராசி அன்பர்களே, குடும்பத்தில் இருந்த எதிர்ப்புகள் குறையும். சிக்கனத்தை கடைப்பிடிக்கவும். அலைச்சல், டென்ஷன் வெகுவாக குறையும். உத்யோகத்தில் பணிச்சுமை கூடும்.
தனுசு தனுசு ராசி அன்பர்களே, மனதில் தன்னம்பிக்கை, தைரியம் அதிகரிக்கும். எதிர்பார்ப்புகள் நாளடைவில் பூர்த்தியாகும். நட்பு வழியில் நன்மை உண்டு. உத்யோகத்தில் ஆதரவு பெருகும்.
மகரம் மகர ராசி அன்பர்களே, மற்றவர்களை நம்பி எதையும் செய்ய வேண்டாம். உறவினர்கள் எதிர்பார்ப்புகளுடன் பழகுவர். திருமண காரியம் கைகூடும். தொழில், வியாபாரத்தில் சாதிக்க முடியும்.
கும்பம் கும்ப ராசி நேயர்களே, நல்லவர்களின் தொடர்பு நன்மையை தரும். சேமிப்பில் கவனம் செலுத்தவும். வீண் விவாதங்களை தவிர்க்கவும். தொழில், வியாபாரம் மேன்மையடையும்.
மீனம் மீன ராசி நேயர்களே, மனதில் மாறுபட்ட யோசனைகள் பிறக்கும். பொது காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். பயணங்கள் தள்ளி போகும். உத்யோகத்தில் பாராட்டு கிடைக்கும்.