சில்க் ஸ்மிதாவின் பயோபிக்கில் - நடிகை சந்திரிகா ரவி நடிக்கப் போவதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. யார் இந்த சந்திரிகா ரவி : ஆஸ்திரேலியாவில் இந்திய வம்சாவளி குடும்பத்தில் பிறந்த சந்திரிகா ரவி , 2012ம் ஆண்டு மிஸ் ஆஸ்திரேலிய அழகிப் போட்டியில் இறுதி வரை சென்றுள்ளார். மாடலிங் துறையில் அவருக்கு இருந்த ஆர்வம் அப்படியே கோலிவுட் பக்கம் அவரை கூட்டிக் கொண்டு வந்தது.
இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தில் மிகவும் கிளாமர் நடித்ததால் அடுத்து வரும் வாய்ப்புகளும் கிளாமர் ரோல் ஆகவே வருகின்றன.. தெலுங்கு ஹிந்தி என அனைத்து மொழி படங்களிலும் குத்தாட்டம் போட்டு வருகிறார். இந்நிலையில், புதிதாக சில்க் ஸ்மிதா பயோபிக்கிலும் அவர் நடிக்க உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.
சில்க் ஸ்மிதா பயோபிக்: ஜெயராம் என்பவர் இந்த படத்தை இயக்குகிறார். இதில், நடிகை சில்க் ஸ்மிதாவாக சந்திரிகா ரவி நடிக்க உள்ளதாக ஃபர்ஸ்ட் லுக் உடன் இன்று அறிவிப்பு வெளியாகி உள்ளது. நடிகை சில்க் ஸ்மிதா 1960ம் ஆண்டு டிசம்பர் 2ம் தேதி பிறந்தார். 1996ம் ஆண்டு செப்டம்பர் 23ம் தேதி இளம் வயதில் உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இன்னமும் ரசிகர்களின் கனவுக் கன்னியாக சில்க் ஸ்மிதா ரசிகர்கள் நெஞ்சில் உள்ளது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே வித்யா பாலன் டர்ட்டி பிக்சர் படத்தில் சில்க் ஸ்மிதாவாக நடித்திருப்பார். மார்க் ஆண்டனி படத்தில் சில்க் ஸ்மிதாவை ரீக்ரியேட் செய்திருந்தனர்.